உள்நாடு

மேலும் 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – இலங்கைப் போக்குவரத்து சபைக்கு, 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப் பகுதிகளில், நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய 200 சொகுசுப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், விலைமனுக் கோரலின் பிரகாரம், அங்கீகாரம் பெற்ற உள்ளூர் நிறுவனங்களின் ஊடாக, அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம், போக்குவரத்துத் துறை அமைச்சர் காமினி லொக்குகேவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் மஹிந்த நாளை பங்களாதேஷ் நோக்கி பயணம்

சீனிக்கு இன்றும் நாளையும் கலந்துரையாடல்

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor