உள்நாடு

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று மேலும் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,704 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2023 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 669 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று நாட்களாக மாயமான 16 வயது பாடசாலை மாணவி

editor

சஜித் அணி சிரேஷ்ட எம்.பி ஒருவர் அரசாங்கதுடன்? மனைவி ஊடாக உறுதிப்படுத்தப்படுகிறது

நாளைய தினம் ரயில் சேவையில் தாமதம் நிலவலாம்