(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
19 வயது மற்றும் 75 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්