விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 341 என்ற வெற்றி இலக்கு

(UTV | மேற்கிந்திய தீவுகள்) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 341 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

நேற்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்சை நிறைவுசெய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிசங்க 103 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

நிரோஷன் டிக்வெல்ல 96 ஓட்டங்களையும் ஓசத பெனாண்டோ 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 169 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்ன அதிகபட்சமாக 70 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், பதிலுக்கு தனது முதல் இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 103 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் Rahkeem Cornwall அதிகபட்சமாக 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சுரங்க லக்மால் 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

341 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நான்காம் நாள் ஆட்ட நிறைவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Related posts

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு பர்வீஷ் மஹ்ரூப் நியமனம்

ரசிகர்களுக்கு அனுமதியில்லை