விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி படைத்த உலக சாதனை

(UTV|WEST INDIES) 365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப விக்கட் இணைப்பட்டமாக பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன் கெம்பெல் மற்றும் சஹாய் ஹோப்பும் சாதனைப்படைத்துள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஜோன் கெம்பெல் 179 ஓட்டங்களையும், சஹாய் ஹோப் 170 ஓட்டங்களையும் பெற்று இந்த சாதனைப் படைத்துள்ளனர்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றது.

 

 

 

 

Related posts

ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் : இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம்

இலங்கை டெஸ்ட் அணிக்கு மஹேலவிடமிருந்து பாராட்டு

46 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி பின்னிலையில்