விளையாட்டு

மேற்கிந்திய அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இராஜினாமா

(UTV |  மேற்கிந்திய தீவுகள்) – மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவ்வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப சுற்றில் மேற்கிந்திய அணி விலகியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் உலக இருபதுக்கு 20 சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்காக இரண்டு ஆரம்ப சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

அது நடக்கக் கூடாது என்கிறார் பில் சிம்மன்ஸ்.

இந்நிலையில், அனைத்து நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்டு, மேற்கிந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

காயம் காரணமாக துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை.

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி!

T20 போட்டியிலிருந்து 2 வேகப்பந்து வீச்சாளர்கள் நீக்கம்