சூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது…

(UTV|COLOMBO)-பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை எதிர்த்து சட்டமா அதிபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கொஸ்வத்த – தலஹேன பிரதேசத்தில் உள்ள கல்வாரி தேவஸ்தானத்தினுள் பலவந்தமாக நுழைந்து, சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட்ட 13 பேர் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவிற்கு எதிர்த்தரப்பினரால் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வழக்கினை தாங்கள் தொடர்ந்தும் முன்செல்லவில்லையென சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்று, மேன்முறையீட்டை விலக்கிக்கொள்ள அனுமதியளித்துள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்

நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு