கேளிக்கை

மெகா ஸ்டாருக்கு தங்கச்சி ஆகப்போகும் ரவுடி பேபி?

(UTV | இந்தியா) – தெலுங்கில் ரீமேக் ஆகும் அஜித் படத்தில் நடிகை சாய் பல்லவி மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பாலும் க்யூட்டான நடிப்பாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் வேதாளம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்தார். அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்தார். இந்நிலையில் லக்ஷ்மி மேனன் கதாப்பாத்திரத்தில்தான் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பில்லா படத்தை இயக்கிய மெஹர் ரமேஷ் தான் வேதாளம் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் என்றும் தெரிகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22ஆம் திகதியே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related posts

இணையதளத்தில் ஹாட்டான டாப்பிக்காக பேசப்படும் பிரபல நடிகை!இதுவா காரணம்?

100 படங்கள் நடித்த பிறகே திருமணம்

‘சக்ரா’வுக்கு தடை