கிசு கிசுகேளிக்கை

மூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யாவிற்கு ஜோடியாகும் அந்த பிரபல நடிகை…

(UTV|INDIA) சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா – சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

 

Related posts

ரஞ்சனுக்கு விடுதலை?

கர்ப்பத்தின் பிறகு நிச்சயதார்த்தம் செய்த நடிகை

கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா