உள்நாடு

மூன்று மணி நேர சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – வார இறுதி நாளான இன்று (27) மின்சார பாவனை அதிகரிக்கும் அத்துடன், எதிர்பாராத அளவுக்கு எரிபொருள் தேவையும் அதிகரித்துள்ளது.

எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P,Q,R,S,T,U,V,W வரையான வலயங்களில் இன்று (27) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த வலயங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரையான காலப்பகுதியினுள் மேலதிகமாக ஒரு மணிநேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த வலயங்களில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த வலயங்களில் இன்றைய தினம் மூன்று மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இன்றைய மின்வெட்டு [27-03-2022]

 

Related posts

சாதாரண பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் 2ஆம் கட்டம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

வட மாகாண ஆளுநர் சாள்ஸ் பதவிப் பிரமாணம் [VIDEO]