சூடான செய்திகள் 1

மூன்று பேரை பலிகொண்ட தனியார் பேரூந்தின் சாரதி பொலிசாரினால் கைது

(UTV|COLOMBO) இன்று(18) காலை மூன்று பேர் பலியான சிலாபம் – மாரவில – மாவெவ பகுதியில் இடம்பெற்ற தனியார் பேரூந்து விபத்து தொடர்பில் அதன் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேரூந்து இரு சாரதிகளினால் மாறிமாறி செலுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பேரூந்தின் நடத்துனர் தலைமறைவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவாகிய பேரூந்து நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 என காவற்துறையினர் தெரிவித்திருந்த போதிலும், மூன்று பேரே உயிரிழந்ததாக, காவற்துறை ஊடக பிரிவு இன்று(18) மதியம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

ரயில் சேவையில் தாமதம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(11) முதல் ஏற்பு