கேளிக்கை

மூன்றாவது முறையாக இணையும் விஜய் – ராஷ்மிகா

(UTV | இந்தியா) – தெலுங்கில் மூன்று வருடங்களுக்கு முன் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை வசீகரித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியானது.

அதனாலேயே அதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தனர். ஆனால் முதல் படத்தில் கிடைத்த வெற்றி இரண்டாவது படத்தில் கிடைக்கவில்லை. தவிர கிசுகிசுக்களில் வேறு இருவரும் வசமாக சிக்கிக்கொண்டனர்.

இதனால் இந்த இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் மூன்றவதாகவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனராம்.

இந்தப்படத்தை பிரபல முன்னை இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை இயக்கி வரும் சுகுமார் அந்தப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக இந்தப்படத்தை துவங்க இருக்கிறாராம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சூர்யாவின் திரைப்படத்திற்கு A சான்றிதழ்

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்