உள்நாடு

மூன்றாவது மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டது

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த 3வது மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் தேவையான மின்சாரம் தொடர்பில் மதிப்பிடப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Related posts

நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

editor

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சில குழுவினர் வீடுகளுக்கு

ACMCயுடன் இணைந்த, சம்மாந்துறை SLMC உறுப்பினர்!