உள்நாடு

மூன்றாவது அலை வௌிநாடாக இருக்கலாம் என ஆரூடம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று(18) காலை ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும், கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நடைமுறைப் பரீட்சைகள் 29 ஆம் திகதி முதல் ஆரம்பம்

நீர்த்தேக்கங்களை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரிக்கை

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு முடக்கம்