சூடான செய்திகள் 1

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0)- அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கள் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா, பம்பலபிடிய இந்து கல்லூரி, ஞானோதயா, களுத்துறை ஞானோதய, இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம், குருநாகல் ஷாந்த ஆனா, கண்டி கிங்ஸ்வுட், கண்டி விகாரமகா தேவி மகளிர் பாடசாலை, கண்டி சீதாதேவி மகளிர் பாடசாலை, காலி வித்தியாலோக, பதுளை விகாரமகா தேவி மகளிர் பாடசாலை மற்றும் பதுளை ஊவா மகா வித்தியாலயம் ஆகியன இம்மாதம் 16 ஆம் திகதிவரை மூடப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று

இலங்கை மற்றும் மற்றைய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள்

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – சம்பிக்க