கிசு கிசுகேளிக்கை

மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை பெற்ற சமந்தா லீக் செய்த போட்டோ

(UTV|INDIA) திருமணம் ஆன பிறகும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் சமந்தா பல நடிகைகளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார். காதலர்களாக மட்டுமே தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருந்த ஸ்ரேயா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் திடீரென்று கல்யாணம் செய்துகொண்டிருப்பதை சமீபகாலத்தில் காண முடிந்தது. இந்தபட்டியலில் இணைய சீக்கிரமே கல்யாணத்துக்கு தயாராகியிருக்கிறார் எமி ஜாக்ஸன். திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி வேடம் என்று அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களுக்கு பை பை சொல்லயிருக்கிறார் சமந்தா. அட்டகாசமான கவர்ச்சி வேடங்களுக்கு அவர் மறுப்பு சொல்வதில்லை. இனி வரும் படங்களிலும் கவர்ச்சிக்கு நான் தயார் என்பதுபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கவர்ச்சி படம் ஒன்றை நேற்று வெளியிட்டார் சமந்தா.

பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளும் வகையில் அவரது கெத்தான மேக் அப், ஆடம்பர காஸ்டியூம், எடுப்பான கவர்ச்சி எல்லாமே கிக்காக இருந்ததால் அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் குவித்துள்ளனர். படத்தை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே அதற்கு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை அடைமழையாக ரசிகர்கள் பொழிந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் சமந்தா.

 

 

 

 

Related posts

கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றது…

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு இன்று மும்பையில்…

பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்