வகைப்படுத்தப்படாத

மூடுபனியால் வாகனங்கள் மோதல் – 6 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA)-வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் மூடுபனி படர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குன்னார் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவை இல்லை

Discount bonanza from SriLankan

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு