உள்நாடு

மூடப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடை பண்ணைகள்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.பண்ணைகளில் கால்நடைகள் திருட்டு போவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், விலங்குகள் திருட்டு காரணமாக சிறு பண்ணைகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோபா குழு தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 ஆடுகள் இம்புலதண்டா மற்றும் தெலஹெர ஆடு வளர்ப்பு நிலையங்களில் இறந்தது குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

மலையக மக்கள் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பழனி திகாம்பரம்.