சூடான செய்திகள் 1

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் எழுந்த நெருக்கடி நிலைமையை அடுத்து அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதிமன்றில் முன்னிலையாகும் மகிந்த தரப்பு…

தபால் மூல வாக்களிப்பு – 47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை…