சூடான செய்திகள் 1

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம்

(UTVNEWS | COLOMBO) -முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்தம் செய்வதற்கான யோசனைகளை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரலவிடம் இன்று(15) ஒப்படைப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதகவும், எதிர்காலத்தில் அதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையலாடலின் போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் முஸ்லிம் திருமணத்தின் போது ஆணிண் வயதை 18 வயதாக அதிகரித்தல், பெண்கள் திருமண பதிவின் போது கட்டாயமாக கையொப்பமிடல் உட்பட 11 திருத்தங்கள் உள்ளடங்கிய யோசனையை தயாரிக்க உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

இன்று முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

கோட்டாபய ராஜபக்ஷாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு