அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நீர்கொழும்பு போருத்தொட்ட பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரம் தான் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

நீர்கொழும்பு மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரம் தான் ஏழு முஸ்லிம் உறுப்பினர்களைப்பெற முடியும். வட்டாரங்களை வென்றாலும் தோற்றாலும் பட்டியலிலாவது முஸ்லிம் உறுப்பினரைப்பெற சந்தர்ப்பம் கிடைக்கும்.

வேறெந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் முஸ்லிம் உறுப்புரிமையைப்பெற முடியாதென்பதை உணர்த்து கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்தில் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. தற்போதுள்ள நிலைமையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத்தீர்ப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

கட்சி எப்போதும் உங்களுக்கு ஒத்துழைப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும். நீர்கொழும்பு மாநகர சபையைக்கைப்பற்றி, மாநகர அதிகாரத்தைப் பெறுகின்ற சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டுமென்றால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களியுங்கள். உங்களுக்கான உரிய அதிகாரத்தைப் பெற்றுத்தருவோம்.

இதன் மூலம் மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என்று மூன்று கட்ட அதிகாரங்களையும் பெறலாம்.

இம்முறை சிந்திந்து வாக்களியுங்கள். மற்ற கட்சியினருக்கு வாக்களித்து நமது பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க துணை போக வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் என அவரது உரையில் தெரிவித்தார்.

இதன்போது, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தனர்.

-ஊடகப்பிரிவு

Related posts

நாடளாவிய ரீதியாக பெட்ரோல் நிலையங்களில் இருந்து எரிபொருள் மாதிரிகள் பரிசோதனைக்கு

வாக்களிப்பு நிலையங்களுக்கு தொலைபேசியை எடுத்துச் செல்ல தடை

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு