உள்நாடு

முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் ‘புர்கா’ தடை

(UTV | கொழும்பு) – இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு வலியினை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டக் தெரிவித்துள்ளார். 

தேசிய பாதுகாப்பு அடிப்படையில், புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

“இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு வலியை ஏற்படுத்துவதொன்றாகும். சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் அவையுடன் சம்பந்தப்பட்ட சவால்களால் இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகளானது, பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும். ” என உயர் ஸ்தானிகர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Related posts

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை