உலகம்

முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது

(UTV|பாகிஸ்தான்) – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த திங்கள்கிழமை, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், முஷாரஃபுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வரும் முஷாரஃப் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைக்கு ஈரான் அதிருப்தி

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் பலி

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்!!