உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த பஸ் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், பஸ்ஸில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 22,501 பேருக்கு சைனோபாம் இரண்டாம் செலுத்துகை

நிர்க்கதியான இலங்கையர்கள் 14 பேர் நாட்டிற்கு வருகை

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு.