உள்நாடு

முல்லைத்தீவில் இளைஞன் அடித்து கொலை

(UTVNEWS |MULLAITIVU) – முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் குறித்த நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்து இருக்கின்றார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாத பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறி நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில்  இன்றைய தினம் அப் பகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையான பலத்த மழை

தேர்தல் பாதுகாப்பு – 69,000 பொலிஸார் கடமைகளில்

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்படைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

editor