உள்நாடு

முறைப்பாடுகளை பதிவு செய்ய மக்கள் தொடர்பான பிரிவு 24 மணி நேரமும்

(UTV|கொழும்பு)–மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பான பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரசாங்கம் நியமிக்கும் உத்தரவை மீறுதல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் 011-2354550 அல்லது 0112354655 என்ற இலக்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

அத்தோடு, 0112 354354 என்ற இலக்கத்தின் மூலமாகவும் நேரடியாக ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 3872/3873/3874 அல்லது 3875 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவதன் ஊடாகவும் உங்களது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தெரிவிக்க பல தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான தகவல்களை 011 2860003 அல்லது 011 2860004 என்ற எண்களுக்கு அழைத்து வழங்க முடியும் என்பதோடு ஜனாதிபதி ஊடக பிரிவின் 011 2354354 அல்லது 3355 என்ற இலக்கங்களின் ஊடாகவும் தெரிவிக்க முடியுமென ஜனாதபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்.சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

“சனத் நிசாந்தவின் மனைவி அரசியலுக்குள்- பதவியும் தயார்”