வகைப்படுத்தப்படாத

முறி மோசடி அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் குறித்த கூட்டம் இன்று மதியம்

(UTV|COLOMBO)-கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று இன்று மதியம், நாடாளுமன்ற வளாகத்தில், சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

முறி விநியோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நடத்துவதறகான, திகதி தீர்மானம் தொடர்பில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த அறிக்கை மீதான விவாத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்த, கடந்த 24ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

எனினும், உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர், விவாதம் ஒன்றை கோரியதாகவும் அதற்கு அரசாங்கம் இணங்க வில்லை என ஜேவிபி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் தெரிவித்தன.

இதனிடையே, உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைப்பெறும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், முடிந்தால் விவாதம் ஒன்றை நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சவால் ஒன்றை விடுத்தார்.

அதன்பின்னர், பிரதமர் ரணில் விக்கரமசிங்க பெப்பரவரி மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுக்கு இணக்கம் வெளியிட்டார்.

இந்தநிலையிலேயே, குறித்த திகதி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, நாடாளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ள உரிய திகதி குறித்து ஆராயும் பொருட்டே, கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

ත්‍රස්ත ප්‍රහාරයෙන් බිදුණු සිත් එක් කිරීමට ආගමික නායකයන් සහ දේශපාලනඥයන් මුල් විය යුතු බව ජනපති කියයි

ශ්‍රී.ල.නි.ප සහ ශ්‍රී.ල.පො.පෙ අතර තවත් සාකච්ඡාවක්