கேளிக்கை

முரளிதரனாக விஜய் சேதுபதி – வெடிக்கும் சர்ச்சை

(UTV | இந்தியா) – இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு தெரிவித்து “ShameOnVijaySethupathi” ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

முரளிதரன் டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது.

அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ShameOnVijaySethupathi” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?

சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

அவசரமாக திருமணம் நடைபெற்றது ஏன்? – யோகி பாபு