வகைப்படுத்தப்படாத

முப்பதாயிரம் உலக வரைப்படங்களை அழித்த சீனா…

(UTV|CHINA) தாய்வானை தனி நாடாகவும், இந்தியா – சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக கூறி சுமார் 30,000 உலக வரைபடங்களை சீன குடியுரிமை அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தை தங்களது பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக இந்திய தலைவர்கள் அருணாசல பிரதேசத்துக்கு செல்கிற போது, சீனா அதனை கண்டித்து தனது எதிர்ப்பை முன்வைக்கிறது. அதே சமயம் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இதேபோல், தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற தாய்வான் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சீனா கூறி வருகிறது. இதன் காரணமாக சீனாவில் தயார் செய்யப்படும் உலக வரைபடங்களில் அருணாசல பிரதேசம் மற்றும் தாய்வான் அந்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளாக குறிப்பிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Prithvi Shaw suspended from cricket after doping violation

மாணவர்களின் வரவு குறைவு

தீயில் சிக்கிய நாயை மீட்க போன நபர் பலி!