அரசியல்உள்நாடு

முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் – நிஹால் தல்துவ

அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஆதரவு வழங்கினால், அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் காலத்தில், தேர்தல் வன்முறைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களை பாதுகாப்பதற்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக 241 கலகம் அடக்கும் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும், முப்படையைச் சேர்ந்த 11,000 அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் தேவை ஏற்பட்டால் அவர்களை அழைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுமார் 3,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 13,000 அதிகாரிகளின் ஆதரவுடன் நடமாடும் ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“ஒப்பீட்டளவில், கடந்த காலங்களில், இடம்பெற்ற தேர்தல்களில் மனிதக் கொலைகள் கூட பதிவாகியுள்ளன.

ஆனால் இந்த ஆண்டு 480 தேர்தல் முறைப்பாடுகள் மட்டுமே காவல்துறையால் விசாரிக்க முடிந்துள்ளது.

அவற்றில் 152 குற்றவியல் முறைப்பாடுகள் உள்ளன. அதாவது இன்று வரை.

அத்துடன் 480 இல் 328 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 108 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 வாகனங்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த தேர்தலில் மற்ற காலங்களுடன் ஒப்பிடும் போது வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லை.

இன்னும் சில நாட்களில் இதே நிலை நீடித்தால் பொதுமக்களிடம் இதுபோன்ற கேள்விகள் தேவைப்படாது என நினைக்கிறேன்.

மக்கள் கேள்வி கேட்கின்றனர், உணவு பொருட்களை சேகரிக்க வேண்டுமா? நாளை மறுநாள் பிரச்சனை வருமா? என்று.

ஒவ்வொரு பிரஜைகளுக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை ஆதரித்து, சட்டத்தின்படி செயல்பட்டால், அத்தகைய கேள்விகளை எழுப்பத் தேவையில்லை.

தேவையான பாதுகாப்பை பொலிஸார் முழு அளவில் அளித்துள்ளனர்.

பொதுமக்களின் பங்கை சட்டப்படி செய்தால், இதுபோன்ற பதிவுகள் மற்றும் கேள்விகள் தேவையில்லை.” என்றார்.

Related posts

ஜனாதிபதி அநுரவின் புதிய திட்டத்திற்கு வலு சேர்த்த சங்கா, மஹேல | வீடியோ

editor

இன்றைய நாடாளுமன்றில்…

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

editor