உள்நாடு

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

(UTV | கொவிட் -19) – முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 

அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுப்பில் உள்ள அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக முகாமின் தலைவர் அல்லது பொறுப்பான அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

ரிஷாத் பாராளுமன்றம் வருவதில் சட்டரீதியான தடைகள் இல்லை

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது