உள்நாடு

முன்பள்ளி ஆசிரியர்களது மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மெய்நிகர் ஊடகசந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவு அதிகரிப்பானது இன்று(01) முதல் அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை

2021வரவு செலவுத்திட்டம் – வாக்கெடுப்பு இன்று

“பொடி லெசி” தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு