உள்நாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) –  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாததன் காரணமாக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹுசைன் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​பௌத்தலோக மாவத்தை மற்றும் ஹெவ்லொக் வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கை அடுத்த வருடம் மார்ச் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Related posts

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி

2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

editor

இன்றும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு