உள்நாடுசூடான செய்திகள் 1

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]

(UTV|COLOMBO)- மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளது.

——————————[UPDATE]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை

(UTV|COLOMBO)- அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்ப்படுத்தியமைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில், தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக, சரண குணவர்த்தன பணிபுரிந்த காலத்தில், 960,000 ரூபா செலவழித்து மூன்று வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொண்டதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணி ஒப்பந்தம் – கோப் குழு விசாரணை

இன்றைய காலநிலை…

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது