அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிகிரியாவின் அபிவிருத்தி – சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்புத் திட்டம் – கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

editor

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

editor

எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்