வகைப்படுத்தப்படாத

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான  ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்காக விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சபையின் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், உறுப்பினர் ரவி கருணாநாயக்க  விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார். உரையாற்றிக்கொண்டிருந்த அவர், மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான அறிக்கையை வாசிப்பதற்கு ஆரம்பித்தார். எனினும், அதற்கு சபாநாயகர் இடமளிக்கவில்லை.
நிலையியற் கட்டளையின் பிரகாரமே, வாசிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்  அனுமதி கோரியிருந்தார். அதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் மறுப்புத் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

விடுதலை என்ற உன்னத இலட்சியத்தை சுமந்து வெளிவருகிறது “நீந்திக் கடந்த நெருப்பாறு”

ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது முன்னாள் எம்பி சந்திரகுமார்