அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற அரசின் புதிய தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல இதனைத் தெரிவித்தார்.

“30,000 சதுர அடி… ஐந்து ஆண்டுகள். முன்னாள் ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். செல்லவில்லை என்றால்,…

இன்னும் சில நாட்களில் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிப்போம்.

அதன்படி சட்டரீதியாக வௌியேற வேண்டி வரும். இப்போதே சென்று விட்டால் கௌரமாக இருக்கும். இனி அவரே யோசிக்க வேண்டும்” என்றார்

Related posts

மஹிந்தவை கை பிடித்து, அழைத்துச் சென்ற சவுதி தூதுவர்!

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்

குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பாராளுமன்றம் வரமாட்டேன் – நாமல் சவால் – வீடியோ

editor