உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்ப தயார்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடு திரும்புவதற்கு தயாராகி வருகிறார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியா செல்லவுள்ளார். இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, அதன் பின்னர் நாட்டுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். மகனின் பாதுகாப்பினை கருதி அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனமுன்னனியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் தெரிவித்தார்.

இதேவேளை, தனது அதிகபட்ச ஆற்றலுடன் சேவையாற்றியதைப் போன்று, தான் பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது

போதைபொருட்களுடன் நால்வர் கைது