வகைப்படுத்தப்படாத

முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்றும் புஷ்ஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Showers, winds to enhance over South-Western areas

Strong winds to subside in the coming days

Showery and windy conditions to enhance until July 20