முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று (18) வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைதந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரைப் பிரித்து மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கடந்த 6 ஆம் திகதி அதிகாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருவேறு பகுதிகளில் பிரித்து வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் பாகங்களைக் கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் நாளை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.