அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு மீண்டும் பிணை

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (9) அனுமதியளித்துள்ளது.

முன்னதாக லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை (5) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து, மறுநாள் 6ஆம் திகதி மீண்டும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தொன்று தொடர்பாக கொள்ளுப்பிட்டியில் வைத்து லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.

கைதான லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related posts

பேராயரின் அழைப்பை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஆதரித்தது

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு ஆரம்பம்