அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனு மீளப்பெறப்பட்டுள்ளது

மிரிஹானவில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தி தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (09) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லொஹான் ரத்வத்த சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம், தனது கட்சிக்காரருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, இந்த மனுவை மேலும் தொடர விரும்பவில்லை எனவும், அதனை மீளப் பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மனுவை மீளப்பெற அனுமதி வழங்கினார்.

Related posts

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது

இலங்கை தாதியருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளது

editor