அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு போலியான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது சட்டத்தரணி, தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதன்படி, டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்

Related posts

அரச நிறுவனங்களில் மின்சாரம், எரிபொருளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை

பசறை பேரூந்து விபத்து : சாரதிக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை

முதல் கிலோமீட்டருக்கு முச்சக்கர வண்டிக் கட்டணம் ரூ. 100 ஆல் அதிகரிப்பு