அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திரசேன சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (23) சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார்.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடம் இருந்து அவர் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

சர்வஜன அதிகாரத்தின் தலைமைக் குழுவிற்கும் முன்னாள் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2001 முதல் 2024 வரை அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

எஸ்.எம். சந்திரசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பல அமைச்சுப் பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 285 பேர்

தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்!