அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை சுமார் 200 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53 (1) ஆவது பிரிவின்படி நேற்று (17) முதல் இடைநிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

கடந்த காலங்களில், இந்த விசாரணைகள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரின் சொத்துக்கள் பலவற்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத்தினர் 71 பேருக்கு பதவி உயர்வு

பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திம் ஆரம்பமானது!

ஓமான் விவகாரத்தில் குஷான் மற்றும் இரு பெண்கள் கைது: 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இரத்து