சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரால் பொது சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தி பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி முறைப்பாடு செய்வதாக அமைச்சர்கள் செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர கூறினார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு 13 நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கி இருப்பதானது பொதுச் சொத்து துஷ்பிரயோகம் செய்வதாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதுவரை அவர்களின் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வீடுகளை திரும்ப வழங்கவில்லை என்றும் சிலர் தாம் ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கு சென்று சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாகவும் அஜித் ஜயசுந்தர கூறினார்.

 

 

 

Related posts

சர்வதேசத்தில் எரிபொருள் விலை குறைந்தால் அதன் பிரதிபலன் மக்களுக்கே

யாழ் நகரில் நுண்கடனால் பாதிப்படைந்தவர்களுக்கு விமோசனம்

துமிந்த சில்வாவின் மேன்முறையீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று