உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

(UTV |கொவிட் 19) – மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறமாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்:

முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து, முச்சக்கர வண்டிகள், நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள், மெனிங்சந்தை போன்ற மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பொது போக்குவரத்துக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறதா?

கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்