உள்நாடு

முதியோருக்கான கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானம்

(UTV|கொழும்பு) – முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் 70 வயதிற்கு மேற்பட்ட 137,000 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீடுகள் இன்மையால், முதியோருக்கான கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கொடுப்பனவை செலுத்துவதற்குரிய நிதியை அரசிடம் கோரியுள்ளதாக செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

தற்போது 416,667 பேர் முதியோருக்கான கொடுப்பனவை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான பிரேரணை, சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் முதியோருக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

Related posts

யால விலங்குகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் : வழிகாட்டியர்கள் பணி இடைநீக்கம்

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!