உள்நாடு

முதல் கிலோமீட்டருக்கு முச்சக்கர வண்டிக் கட்டணம் ரூ. 100 ஆல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – முதல் கிலோமீட்டருக்கான முச்சக்கர வண்டிக் கட்டணம் 100 ரூபாய், மேலதிக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 80 கட்டணம் அறவிடப்படும் என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணக் கட்டண அதிகரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும், பயணிகளைக் கருத்தில் கொண்டு தமது தொழில்துறையைப் பாதுகாக்கும் நோக்கில் தாங்கள் ஒரு முடிவை எடுத்ததாக சங்கத்தின் தலைவர் ஜயருக் தெரிவித்திருந்தார்.

நிலைமையை அவதானிப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்ட 22 உறுப்பினர்கள்

கொழும்பில் முச்சக்கரவண்டியினுள் இருந்து சடலம் ஒன்று மீட்பு

இலங்கை தயார் எனில் IMF தயார்