விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியிலே இலங்கை வீழ்ந்தது

(UTV | கொழும்பு) – இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் பிருத்வி ஷா 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஷிகர் தவான்- அறிமுக வீரர் இஷான் கிஷன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

குறிப்பாக, இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். அவர் 59 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கேப்டன் தவானும் அரை சதம் கடந்து முன்னேறினார்.

மணீஷ் பாண்டே 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும், சூரியகுமார் யாதவ், கேப்டன் தவானுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் தவான் 86 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2வது போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

    

Related posts

100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை

அஸ்வினுக்கு விடுத்த ரிக்கி பாண்டிங்

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்